வியப்பு
எனக்கொரு புதிய(பட்டப்)பெயர்
வைத்திருப்பதாக சொன்னாய்...
கடைசிவரை நீ அதைஅறிவிக்காததால்
வேறு வழியின்றி
இன்றும் நான்
என்னுடைய பழைய பெயரிலேயே
அழைக்கப்படுகிறேன்.
எனக்கொரு புதிய(பட்டப்)பெயர்
வைத்திருப்பதாக சொன்னாய்...
கடைசிவரை நீ அதைஅறிவிக்காததால்
வேறு வழியின்றி
இன்றும் நான்
என்னுடைய பழைய பெயரிலேயே
அழைக்கப்படுகிறேன்.
Posted by ராதா செந்தில் at 9:31 PM 12 comments
என்னைப்பேச விடாமல்
நீயே பேசிக்கொண்டிருக்கும்போது
நான் பேச இடையிடையே
சந்தர்ப்பங்கள் கிடைத்தும்
அவற்றை வேண்டுமென்றே
நழுவ விடுகிறேன்...
Posted by ராதா செந்தில் at 9:29 PM 1 comments
தொலைபேசியில்
நீ அழைக்கும் நேரம் மட்டும்
அருகிலிருப்பவர்கள்
தொல்லை பேசுபவர்களானர்கள்.
Posted by ராதா செந்தில் at 9:24 PM 2 comments
நான் முதலில் உனைப் பார்த்தது
துவைத்து காயப்போடப்பட்டிருந்த
துணிகள் நிறைந்த
மொட்டை மாடிகள் சூழ்ந்த
உன் வீட்டு மொட்டை மாடியில்...
வண்ணத் துணிப் பூக்கள்
மத்தியில்
உயிர்ப்பூவாய் நீ!
Posted by ராதா செந்தில் at 9:20 PM 0 comments